/ தினமலர் டிவி
/ பொது
/ திருப்பூரில் மழை வெள்ளத்தில் அடித்து வந்த பிளாஸ்டிக் கழிவுகள் | Tirupur heavy rain | Flood on stree
திருப்பூரில் மழை வெள்ளத்தில் அடித்து வந்த பிளாஸ்டிக் கழிவுகள் | Tirupur heavy rain | Flood on stree
தமிழகம் முழுதும் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் திருப்பூரில் 2 நாட்களாக கனமழை பெய்தது. நேற்று மாலை கிட்டத்தட்ட 3 மணி நேரம் கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகள், தாழ்வான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டு காந்திநகர் சிக்னல் அருகில் உள்ள ஃபயர் சர்வீஸ் காலனி தெருக்களில் வெள்ளம் ஆறாய் ஓடியது. அங்குள்ள சாக்கடையில் இருந்து லட்சக்கணக்கான பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகள் வெள்ளத்தில் மொத்தமாக அடித்து வந்த காட்சிகள் இப்போது வெளியாகி உள்ளது.
அக் 16, 2024