தோட்டத்து குடோனில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள்
திருப்பூரில் பல்லடம் அருகே வேலப்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை புரோக்கர்கள் மூலம் மூட்டை, மூட்டையாக கொண்டு வந்து தமது தோட்டத்து குடோனில் பதுக்கி வைத்துள்ளார். இரவு நேரங்களில் அவற்றை தோட்டத்தில் எரிப்பதை வழக்கமாக கொண்டிருப்பதாக தெரிகிறது. இதனால், சுற்றுவட்டார பகுதிகளில் புகை சூழ்ந்து சுகாதர சீர்கேடு ஏற்படுவதாகவும், சுவாச கோளாறு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஜன 31, 2025