உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நிலச்சரிவு நடந்த இடத்தில் நிபுணர்கள் ஆய்வு Tiruvannamalai landslide seven dies debris IIT expert com

நிலச்சரிவு நடந்த இடத்தில் நிபுணர்கள் ஆய்வு Tiruvannamalai landslide seven dies debris IIT expert com

பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் கனமழை பெய்தது. இதனால் திருவண்ணாமலை மலையின் கிழக்கு பக்கத்தில், வஉசி நகர் 11வது தெருவின் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு அங்கிருந்த ராஜ்குமார் என்பவரது வீட்டில் விழுந்ததில் வீடு மண்ணுக்குள் புதைந்தது. இதில் ராஜ்குமார் உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் 2 பேரின் உடல்கள் கிடைக்கவில்லை. இந்த சூழலில் இன்று மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மண் பரிசோதனை நிபுணர்கள் நரசிம்மராவ் மோகன், பூமிநாதன் ஆகாஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை