உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி எஸ்பி அதிரடி | Tiruvarur | Tiruvarur police | bribe

காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி எஸ்பி அதிரடி | Tiruvarur | Tiruvarur police | bribe

திருட்டு கும்பலிடம் 3 லட்சம் லஞ்சம்! இன்ஸ்., உட்பட 5 பேர் தூக்கியடிப்பு திருவாரூர் பழைய தஞ்சை சாலை லாரி செட்டில் தனியார் டிராவல்ஸ்க்கு சொந்தமான லாரியில் தொடர்ந்து டீசல் திருடு போனது. அந்த நிறுவனத்தின் மேலாளர் அசோக்குமார் திருவாரூர் நகர போலீசில் ஐந்து நாட்களுக்கு முன் புகார் கொடுத்தார். விசாரித்த இன்ஸ்பெக்டர் ராஜூ உள்ளிட்ட தனிப்படையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் அடியக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த அப்துல் மஜீத், பஜ்ருல் ஷேக் ஆகிய இருவரை கைது செய்தனர். இந்த சூழலில் லாரி செட் யூனியன் சார்பில் திருவாரூர் எஸ்பியிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் டீசல் திருட்டில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை தப்பிக்க வைக்க போலீசார் மூன்று லட்சம் பணம் வாங்கி உள்ளனர். அதை பாதிக்கப்பட்ட எங்களுக்கு கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புலன் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. எஸ்பி கரூண் கரட் விசாரித்தார். திருவாரூர் நகர இன்ஸ்பெக்டர் ராஜு, தனிப்படையைச் சேர்ந்த எஸ்ஐ பூபதி, ஏட்டு ஜானி, பிரபு, அருள் ஆகிய ஐந்து பேரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார். இறுதிக்கட்ட விசாரணையை தஞ்சாவூர் சரக டிஐஜி நடத்துவார். அதன் பிறகு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

பிப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ