/ தினமலர் டிவி
/ பொது
/ கீர்த்தி வர்மாவுக்கு கைகள் பொருத்த அரசு ஏற்பாடு | TN Govt | Plus 2 Student | Exam Result
கீர்த்தி வர்மாவுக்கு கைகள் பொருத்த அரசு ஏற்பாடு | TN Govt | Plus 2 Student | Exam Result
கிருஷ்ணகிரி அடுத்த ஜீனுாரை சேர்ந்தவர் கீர்த்தி வர்மா வயது 18. சிறுவயதில் ஏற்பட்ட மின் விபத்தில், இவரது இரு கைகளும் முழங்கை அளவில் எடுக்கப்பட்டது. இடது காலில் மூன்று விரல்கள் அகற்றபட்டன. இருந்தும் கல்வி மேல் உள்ள ஆர்வத்தால் பள்ளியில் முதல் மாணவராக திகழ்ந்தார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்றார். நேற்று வெளியான பிளஸ் 2 ரிசல்டில் 600க்கு 471 மதிப்பெண் பெற்று இருந்தார். எனக்கு கைகள் மீண்டும் கிடைக்கும் வகையில் உறுப்பு மாற்று சிகிச்சை செய்ய தமிழக அரசு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
மே 09, 2025