தென்மேற்கு பருவமழை தீவிரம் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள சில்வார்பட்டி, ஜெயமங்கலம், வடுகபட்டி, லட்சுமிபுரம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. சுமார் 3 மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ப்ரத் தேனி மாவட்டம் சுருளி அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை பகுதியில் கனமழை பெய்வதால், சுருளி அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. முல்லை பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வருகிறது. அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 2 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 134 அடிக்கு தண்ணீர் நிறைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்வதால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு க