/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழகத்தை மிரட்டும் மணல் தட்டுப்பாட்டுக்கு வெளியான காரணம் | TN sand mafia | tamilnadu sand scam
தமிழகத்தை மிரட்டும் மணல் தட்டுப்பாட்டுக்கு வெளியான காரணம் | TN sand mafia | tamilnadu sand scam
தமிழகத்தில் ஆற்று மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு தீர்வு காண அரசு எந்த முயற்சியும் எடுக்காத நிலையில், தமிழகத்தில் இருந்து அரசியல்வாதிகள் ஆசியுடன் வெளி மாநிலங்களுக்கு தினமும் 7,500 லோடுகள் வரை மணல் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் விதியை மீறி மணல் அள்ளியதால், ஆற்றில் நீரோட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. நீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து ஆற்று மணலுக்கு மாற்றாக ஜல்லி துகள்களான எம் சாண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆக 27, 2024