60 டு 200 மிமீ ஊற்றும்... 17 மாவட்டங்களை மிரட்டும் மழை | TN weather update | rain today | tn rain al
தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை மார்ச் 3ம் தேதி வரை நீடிக்கும் என்று இப்போது சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்க வாய்ப்புள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை கொடித்தீர்க்க கூடும். நாளை மறுநாள் தென்தமிழகம், வடமாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். திங்கட்கிழமை தென்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும். செவ்வாய் முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுதம் வறண்ட வானிலைக்கே வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 17 மாவட்டங்களில் 6 முதல் 20 செமீ மழை பெய்ய வாய்ப்புள்ளது.