தமிழகத்தை நிர்மலா வட்டமடிப்பது இதற்கு தான் | TN BJP CM candidate name revealed | Annamalai | Nirmala
2026 சட்டசபை தேர்தலுக்கான பணிகளை ஆளும் தி.மு.க., துவக்கி விட்டது. ஆட்சியிலும், கட்சியிலும் அதற்கான பணிகளை முடுக்கி விடுவதற்கென்றே, கட்சியின் இளைஞர் அணி செயலர், அமைச்சர் உதயநிதியை, அவசர அவசரமாக துணை முதல்வராக்கி உள்ளனர். அதற்கேற்ப, அவர் கட்சி மற்றும் ஆட்சிப் பணிகளில் தீவிரம் காட்டுகிறார். தமிழக பாஜவும், சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி, சில பணிகளை துவக்கி உள்ளது. முதற்கட்டமாக, மாநிலம் முழுதும் கட்சி உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடந்து வருகிறது. இந்த பணியில், கட்சியின் அனைத்து முன்னணி தலைவர்களும் களம் இறங்கியுள்ளனர். முதல்வர் வேட்பாளராக களம் இறக்குபவரையும் தேர்வு செய்துவிட வேண்டும் என கட்சி தலைமை முடிவெடுத்திருக்கிறது. கிட்டத்தட்ட அதற்கான தலைவரையும் தேர்வு செய்து விட்டதாம் பாஜ. இதுபற்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: