ஓராண்டுக்கான பாஸ் வழங்கும் திட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசு | Toll gate | 1 Year pass | Life time
ஒரு வருஷத்துக்கு ஒரே ஒரு பாஸ்! டோல்கேட்டில் புதிய நடைமுறை நாடு முழுதும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் டோல்கேட்களில் இப்போது பாஸ்டேக் முறையில் டோல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் தான் டோல்கேட் வழியே அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு வருடாந்திர பாஸ் திட்டத்தை மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதன்படி கார் உரிமையாளர்கள் 3 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஓராண்டுக்கான டோல் பாஸை பெற முடியும். குறிப்பிட்ட அந்த ஓராண்டுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் நாட்டின் எந்த ஒரு டோல்கேட்டையும் கட்டணமின்றி கடக்கலாம். அதேபோல் 15 ஆண்டு காலத்திற்கு என மொத்தமாக 30 ஆயிரம் ரூபாயை கட்டணமாக செலுத்தி லைஃப் டைம் பாஸ் வழங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான ஆலோசனைகள் தொடக்க நிலையில் இருப்பதாக சாலை போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்களுக்கு சுங்க கட்டண செலவை குறைக்க அரசு பாஸ் நடைமுறையை கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.