உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பி விடப்பட்ட கனரக வாகனங்கள்; டோல்கேட்டில் ப்ரீ | Traffic | Chennai |Perungalathur Traffic

திருப்பி விடப்பட்ட கனரக வாகனங்கள்; டோல்கேட்டில் ப்ரீ | Traffic | Chennai |Perungalathur Traffic

தொடர் பண்டிகை மற்றும் காலாண்டு தேர்வு விடுமுறையை ஒட்டி சென்ற வாரம் பெரும்பாலான சென்னை வாசிகள் தங்கள் சொந்த ஊர் புறப்பட்டனர். விடுமுறை முடிந்து இன்று மீண்டும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. தென் மாவட்டங்களில் இருந்து அதிகப்படியான மக்கள் சென்னை நோக்கி நேற்று மாலை முதல் படையெடுத்தனர். தொடர்ந்து கார்கள் வந்து கொண்டிருப்பதால் வண்டலூர் பெருங்களத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. இரவில் ஏற்பட்ட வாகன நெரிசலால் ஜிஎஸ்டிகள் திணறியது. நீண்ட வரிசையில் காத்திருந்து வாகனங்கள் ஊர்ந்து சென்றன. வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், ஜிஎஸ்டி சாலையில் டிராபிக் ஜாமில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மதுராந்தகம் அருகே 7 கிமீக்கு வாகனங்கள் இன்ச் இன்ச்சாக நகர்ந்தது. கனரக வாகனங்கள் வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து படைப்பை நோக்கி திருப்பி விடப்பட்டன ஆத்தூர் சுங்க சாவடியில் கட்டணமின்றி வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அக் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ