உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரான்ஸ்பார்மர் வாங்கியதில் முறைகேடு! ஐகோர்ட் உத்தரவு | Senthil Balaji | DMK | TANGEDCO

டிரான்ஸ்பார்மர் வாங்கியதில் முறைகேடு! ஐகோர்ட் உத்தரவு | Senthil Balaji | DMK | TANGEDCO

செந்தில் பாலாஜி மின்சார அமைச்சராக இருந்த கால கட்டத்தில் 1,182 கோடி மதிப்பீட்டில் டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒரே மாதிரியான விலைப்பட்டியலை சமர்ப்பித்து உள்ளனர். 397 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக தெரிகிறது . டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன. சிறப்பு புலனாய்வு குழு இந்த முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் மற்றும் அதிமுக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு விட்டது. செந்தில் பாலாஜிக்கு இன்னும் நோட்டீஸ் வழங்கப்படவில்லை என அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார். செந்தில் பாலாஜி பதிலளிக்க கூறி புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வேல்முருகன், விசாரணையை ஜூலை 3 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ஜூன் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ