கலெக்டரிடம் பள்ளி மாணவர்கள் புகார் மனு | transport minister | dmk | perambalur | students | bus shor
போக்குவரத்து அமைச்சர் தொகுதியில் பஸ் இல்லை 2 கிமீ நடக்கும் மாணவர்கள் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தொகுதி பெரம்பலூர். இங்குள்ள குன்னம் வேப்பூர் தாலுகாவில் காருகுடி, மழவராய நல்லூர், எழும்மூர், பெருமத்தூர் குடிக்காடு என பல கிராமங்கள் உள்ளது. இப்பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கீழப்புலியூர் மற்றும் வேப்பூர் பகுதிக்கு சென்று படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு செல்ல போதிய பஸ் வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. தினசரி 2 கிலோமீட்டர் இருவேளையும் நடந்து சென்று பஸ் பிடித்து பள்ளி செல்கின்றனர். இதனால் பல்வேறு இடையூறுகளை சந்திக்கிறோம். உடனடியாக மாவட்ட நிர்வாகம், துறை அமைச்சர் உரிய தீர்வு காண வேண்டும் என மாணவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.