/ தினமலர் டிவி
/ பொது
/ கொள்ளிடம் ஆற்றில் நடந்த விபத்தில் 4 இளைஞர்கள் காயம்! Trichy | Srirangam | Kollidam River | Car Acci
கொள்ளிடம் ஆற்றில் நடந்த விபத்தில் 4 இளைஞர்கள் காயம்! Trichy | Srirangam | Kollidam River | Car Acci
திருச்சி புள்ளம்பாடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். வயது 23. இவரது நண்பர் நாமக்கல்லை சேர்ந்த ராஜா. இருவரும் ஸ்ரீரங்கம் பஞ்சகரை கொள்ளிடம் மைதானத்தில் மது அருந்தி உள்ளனர். பின்னர் இருவரும் போதையில் காரை எடுத்து வேகமாக ஓட்டி உள்ளனர். கட்டுப்பாடு இல்லாமல் கார் அங்கு கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த திவாகர், ஜெயபிரகாஷ் மீது மோதியது. பின்னர் கட்டுப்பாடு இல்லாமல் ஓடிய கார் 20 அடி ஆழத்தில் கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்தது. கார் மோதியதில் படுகாயமடைந்த திவாகர், ஜெயபிரகாஷ் ஸ்ரீரங்கம் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர்.
மே 28, 2025