சூரியூரில் ஜல்லிக்கட்டில் 17 காளை பிடித்த ரஞ்சித்துக்கு பைக் பரிசு
ஜல்லிக்கட்டில் முதல் முறையாக இறங்கிய காளைக்கு சோக முடிவு திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி சூரியூரில் நடைபெற்றது. இங்குள்ள கருப்பண்ணசாமி கோயிலில் மாட்டுப்பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. மொத்தம், 681 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை அடக்க 500 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். 7 சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது. அடங்காமல் சீறி பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமில் பிடித்து அடக்கி பரிசுகளை தட்டி சென்றனர்.
ஜன 15, 2025