திருச்சியில் திக்திக் விபத்து: 4 பேர் படுகாயம் trichy kattur road accident truck rams two wheelers
திருவாரூர் பகுதியில் இருந்து பருத்தி மூட்டை ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி புறப்பட்ட லாரி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பஸ் ஸ்டாப் நான்கு முனை சந்திப்பில் வந்தது. அப்போது, டிராபிக் போலீஸ்காரர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டார். வேகமாக வந்த பருத்தி மூட்டை லாரி பிரேக் பிடிக்காததால் தாறுமாறாக வந்தது. போலீஸ்காரர் ரெட் சிக்னல் காட்டியதால் வரிசையாக நின்றிருந்த பைக்குகளை லாரி பயங்கரமாக மோதி தள்ளி இழுத்துச் சென்றது. மொத்தம் 7 பைக்குகள் மீது லாரி மோதியது. டிராபிக் போலீசும் சாலையை கடக்க நின்றிருந்தவர்களும் அலறியடித்துக் கொண்டு ஓடியதால் உயிர் தப்பினர். முத்துக்குமார் (52), சுமன் (26) பத்மநாபன் 50, அவர் மனைவி ேஹமா 47 ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.