உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருச்சியில் முக்கிய சுற்றுலா தலமாக உருவான பறவைகள் பூங்கா | Trichy birds park | Birds | Pet animals

திருச்சியில் முக்கிய சுற்றுலா தலமாக உருவான பறவைகள் பூங்கா | Trichy birds park | Birds | Pet animals

திருச்சி, கம்பரசம்பேட்டை அருகே, அய்யாளம்மன் படித்துறை பகுதியில், இந்தியாவின் மிகப்பெரிய பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், நமக்கு நாமே திட்டத்தில், 18.63 கோடி ரூபாய் செலவில் இந்த பூங்கா உருவாகி உள்ளது. இதை கடந்த 9ம் தேதி துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். காவிரி கரையோரம், 4.2 ஏக்கரில் அமைந்துள்ள இந்த பூங்காவில், 40 வகையான பறவைகள், 40 வகையான மீன் இனங்கள் மற்றும் சில வளர்ப்பு பிராணிகளும் உள்ளன. பூங்காவுக்கு வரும் மக்களை உற்சாகபப்டுத்தும் வகையில், அமேசான் கிளிகள், தீக்கோழிகள் மற்றும் பல்வேறு வகை வெளி நாட்டு பறவைகளும் இருக்கின்றன. மக்கள் அவற்றோடு பழகி விளையாடுவதோடு, உணவு ஊட்டி மகிழலாம் என்கிறார் பூங்கா வடிவமைப்பாளரான ஆர்கிடெக்ட் ஆல்வின்..

பிப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை