இனி எச்1பி விசா பெற $1 லட்சம் டாலர் கட்டணம்! | Trump | $100,000 Fee For H-1B Visa | $100K H-1B
அமெரிக்காவில் பணி செய்பவர்கள் எச்1பி விசா பெற வேண்டியது அவசியம். எச்1பி விசா அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு கொடுக்கப்படும் ஒரு தற்காலிக குடியுரிமை இந்த விசா மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரை இதை நீட்டிக்க முடியும். இது ஒரு தற்காலிக விசாவாக இருந்தாலும் இதனை வைத்து, கிரீன் கார்டு போன்ற நிரந்தர குடியுரிமை பெற விண்ணப்பிக்க முடியும். அமெரிக்காவில் மட்டும் ஏறத்தாழ 5 லட்சம் பேர் இந்த விசாவை வைத்திருக்கிறார்கள். இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இவர்களுக்கு இடியை இறக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதில் கையெழுத்திட்டு உள்ளார். இனி எச்1பி விசா பெற நபர் ஒருவருக்கு ஆண்டுக்கு 1 லட்சம் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 88 லட்சம் கட்டவேண்டும் என்பது தான் அந்த அறிவிப்பு. இதற்கு முன் 1.32 லட்சமாக இந்த கட்டணம் இருந்தது. உள்ளூர் மக்கள் தங்களுக்கு வேலை வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் சூழலில் டிரம்ப் அரசு இந்த விசா கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக தெரிகிறது. வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு இது பெரிய அடியாக உள்ளது.