வாய், மூக்கில் ரத்தம் கசிவு; சிறுவனுக்கு என்ன நேர்ந்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மதுராபுரி வேங்கை பெட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் 7 வயது மகன் அஸ்விந்த். சிங்கம்புணரி தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். வழக்கமாக பள்ளி வேனில்தான் பிக்கப் செய்வார்கள். ஆனால் இன்று வேன் ரிப்பேர் என்று அஸ்வந்தை காரில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளனர். பள்ளி முடியும் மாலை நேரத்தில் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அஸ்விந்துக்கு திடீரென வலிப்பு வந்ததால், சிங்கம்புணரி அரசு தாலுக்கா தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம் என கூறியுள்ளனர்.
ஜூன் 30, 2025