துளசி கப்பார்டு - ராஜ்நாத் சிங் பேசியது என்ன? Tulsi Gabbar - Rajnat Singh | USA - India Meeting| Kh
அமெரிக்க உளவு அமைப்பின் தலைவர் துளசி கப்பார்ட், அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு அம்சங்கள், உளவு தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசித்தனர். அமெரிக்காவில் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடும் காலிஸ்தான் ஆதரவு சீக்கிய பிரிவினைவாத அமைப்புகள் குறித்து துளசியிடம் அமைச்சர் ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். சீக்ஸ் பார் ஜஸ்டிஸ் எனும் காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள், தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படுகின்றனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். இதுபோன்ற அமைப்புகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறிய ராஜ்நாத் சிங், இந்தியா மீதான தவறான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், பயங்கரவாத, பிரிவினைவாத செயல்கள் குறித்து துளசியிடம் கவலையை பகிர்ந்து கொண்டார். இரு நாட்டு பாதுகாப்பு, உளவுத்துறை சார்ந்த தகவல் பரிமாற்றம் குறித்து துளசியிடம் ஆலோசித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக ராஜ்நாத் சிங் கருத்து பதிவிட்டுள்ளார். முன்னதாக நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த துளசி, அவருடன் இரு நாட்டு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசித்தார். பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் நீண்ட நாள் நண்பர்கள். அவர்களிடையே நல்ல புரிதல் உள்ளது.