உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தவெக கலைப்பு?. மாமல்லபுரத்தில் விஜய் பெரிய ட்விஸ்ட் tvk karur stampede | vijay mamallapuram meeting

தவெக கலைப்பு?. மாமல்லபுரத்தில் விஜய் பெரிய ட்விஸ்ட் tvk karur stampede | vijay mamallapuram meeting

தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் கடந்த மாதம் கரூரில் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவசரமாக வீடு திரும்பிய விஜய், அதன்பின் வெளியே வரவில்லை. பாதிக்கப்பட்டோரை சந்திக்க கரூர் செல்வதற்கு விஜய் தரப்பில் ஐகோர்ட்டில் அனுமதி கேட்கப்பட்டது. கரூர் மாவட்ட காவல் துறையை அணுகி அனுமதி பெறும்படி கோர்ட் அறிவுறுத்தியது. இதற்கிடையே விஜய் கரூர் செல்வதற்கு பதில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் வரவைத்தார். அங்குள்ள பிரபல ஓட்டலில் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விஜயை சந்தித்தவர்கள் பலரும், விஜய் கட்சியை கலைத்து விடும் முடிவில் இருப்பதாக கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படி உள்ளே என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். பாதிக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு குடும்பத்தையும் 10 நிமிடங்கள் ஒதுக்கி ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அவரே காபி, பிஸ்கெட் பரிமாறினார். கரூர் சென்று சந்திக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார். ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் பேசும் போது பல தடவை விஜய் கண்களில் நீர் பூத்தது. வாழ்நாளின் கடைசி வரை உங்களுடன் இருப்பேன். கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் என எல்லா தேவைக்கும் கடைசி வரை உதவி செய்வேன் என்று ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் தனிப்பட்ட முறையில் விஜய் உறுதி அளித்தார். கூடவே, கடுமையான நெருக்கடிக்கிடையில் தான் கட்சியை நடத்துகிறேன். அந்த நெருக்கடி காரணமாகவே, என் கூட்டத்துக்கு வந்த 41 பேர் உயிர் இழந்தனர்.

அக் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !