உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தவெக செயலர் மரணம்: தொண்டர்கள் அதிர்ச்சி tvk puducherry secretary saravanan dies Heart attack tvk

தவெக செயலர் மரணம்: தொண்டர்கள் அதிர்ச்சி tvk puducherry secretary saravanan dies Heart attack tvk

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின், புதுச்சேரி மாநில செயலாளராக பிருந்தாவனத்தை சேர்ந்த 45 வயதான சரவணன் இருந்து வந்தார். விக்கிரவாண்டியில் வருகிற 27ம் தேதி தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டு பணியில் சரவணன் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். மாநாட்டில் புதுச்சேரி மக்கள் மற்றும் ரசிகர்கள் பங்கேற்பதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் இருந்தபோது, திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், சரவணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

அக் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை