தி.மலை கோயிலுக்குள் செல்ல விடாமல் கலெக்டரை தடுத்த போலீஸ் | TVMalai Temple | Deepam Festival
கலெக்டருக்கே இந்த நிலையா தீப திருவிழாவில் களேபரம் வைரலாகும் வீடியோ திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், கடந்த 4ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் இருந்தே, போலீசுக்கு அதிகாரமா, கலெக்டர் மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கு அதிகாரமா என்ற பனிப்போருடன் விழா நடந்து வந்தது. முக்கிய விழாவாக வெள்ளியன்று அதிகாலை, 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மஹா தீபமும் ஏற்றப்பட்டது. 14,000த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோவிலிக்குள் செல்ல ஒவ்வொரு பக்தரும், 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். நகரினுள் நுழையும்போது, வாகன பாஸ் வைத்திருந்தும், அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி, சில வாகனங்களை மட்டுமே அனுமதித்தனர். இதனால், முக்கிய பிரமுகர்களும் அதில் சிக்கி தவித்தனர்.