உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பள்ளி டாய்லெட்டை பயன்படுத்த விடாத ஆசிரியர்கள்: ராஜா குற்றச்சாட்டு Two girls children drowned pond ne

பள்ளி டாய்லெட்டை பயன்படுத்த விடாத ஆசிரியர்கள்: ராஜா குற்றச்சாட்டு Two girls children drowned pond ne

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள ஆளி மதுரை கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் அங்கன்வாடி அருகருகே உள்ளன. சோபிதா (வயது8) 3-ம் வகுப்பும், கிறிஸ்மிகா (4) அங்கன்வாடியிலும் படித்து வந்தனர். நேற்று பள்ளிக்குச் சென்ற சோபிதா, கிறிஸ்மிகா இடைவேளையின்போது சிறுநீர் கழிக்க பள்ளி அருகே ஓடும் கண்மாய்க்கு சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக கண்மாயில் மூழ்கி இறந்தனர். வீட்டுக்கு அழைத்துச்செல்ல பெற்றோர் வந்தபோது 2 மாணவிகளும் பள்ளி வளாகத்தில் இல்லை. எல்லாரும் சேர்ந்து தேடியபோதுதான், கண்மாயில் மூழ்கி 2 சிறுமிகளும் இறந்தது தெரிய வந்தது. சிறுமிகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் 2 உடல்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிள்ளைகளை கவனிக்காமல் அலட்சியமாக இருந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பெற்றோருக்கு உரிய இழப்பீடும் அரசு வேலையும் வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். இறந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா இன்று ஆறுதல் கூறினார். அப்போது, அவர், பள்ளியில் பாத்ரூம் இருக்கும்போது, அதை பயன்படுத்த மாணவிகளை அனுமதிப்பதில்லை என்ற பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆசிரியர்களே கப்பை கொடுத்து கண்மாய்க்கு அனுப்பியதால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்றார்.

பிப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை