உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உதயநிதி பேசும் போதே பறந்த கரும்பு, வாழைகள் | Udhayanidhi | Udhayanidhi Madurai

உதயநிதி பேசும் போதே பறந்த கரும்பு, வாழைகள் | Udhayanidhi | Udhayanidhi Madurai

என்ன ஆபீசர் நீங்களுமா? ஆளுக்கு ஒரு கட்டு.. இன்னைக்கு ஒரு வெட்டு மதுரை யானைமலை ஒத்தக்கடையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் உதயநிதி பங்கேற்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி திட்டங்களை தொடங்கி வைத்தார். அமைச்சர் உதயநிதியை வரவேற்க திமுகவினர் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு கரும்பு, வாழை மர கட்டி இருந்தனர். விழா நடந்து கொண்டிருக்கும் போதே வீட்டுக்கு கிளம்பிய பெண்கள் வாழை, கரும்பு கட்டுகளை அள்ளி சென்றனர். பெண்களோடு சேர்ந்து அரசு அலுவலர்கள் சிலரும் கரும்புகளை எடுத்து சென்றனர். உதயநிதி விழா நடந்து முடிப்பதுக்குள் கரும்பு, வாழை இருந்த சுவடே தெரியாமல் போனது. வாழை பழங்கள், கரும்பு எடுத்தது போக ஒரு சில வாழை மரங்கள் மட்டுமே எஞ்சி இருந்தது.

செப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ