உபி ஆஸ்பிட்டல் தீ விபத்து பின்னால் நர்ஸ்-அதிர்ச்சி தகவல் | UP hospital fire | NICU | UP fire tragedy
உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. NICU எனப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு கொழுந்து விட்டு எரிந்தது. தீ பிடித்த போது அந்த வார்டில் 54 பச்சிளம் குழந்தைகள் இருந்தன. இதில் 10 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தன. 44 குழந்தைகள் மீட்கப்பட்டன. இதில் 16 குழந்தைகள் உடலில் கொடிய தீக்காயங்கள் உள்ளன. ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியானது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரப்பிரதேசம் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, வார்டில் இருந்த நர்ஸ் ஒருவர் தீக்குச்சியை கொளுத்திய போது தான் இந்த கொடூர தீ விபத்து ஏற்பட்டதாக அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இதை தான் நேரில் பார்த்ததாக ஹமிர்பூரை சேர்ந்த பகவான் தாஸ் என்பவர் கூறி உள்ளார்.