வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உண்மையிலே கடுமையான எச்சரிக்கைதான்
உலக வரைபடத்தில் கூட பாகிஸ்தான் என்றே நாடே இருக்காது: வெளியான எச்சரிக்கை | Upendra Dwivedi Pakistan
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் உண்டானது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தியது. அதில் பாகிஸ்தான் மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்தியாவின் அதிரடியால் நிலைகுழைந்து போன பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த கேட்டுகொண்டதால் மோதல் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் ராஜஸ்தானின் அனூப்கர் ராணுவ முகாமில் பேசிய ஜெனரல் உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியப் படைகள் அடுத்த முறை இதே கட்டுப்பாட்டுடன் இருக்காது. பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்த மறுத்தால், ஆபரேஷன் சிந்தூரின் நடவடிக்கையின் இரண்டாவது கட்டம் விரைவில் நடக்கும். முதல் தடவை காட்டப்பட்ட கட்டுப்பாடு இனி இருக்காது. புவியியல் ரீதியில் இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என சிந்திக்கும் அளவுக்கு இந்திய ராணுவத்தின் நடவடிக்கை இருக்கும். புவியியலில் ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என பாகிஸ்தான் விரும்பினால், அந்நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும். இந்திய வீரர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். கடவுள் விரும்பினால், உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள் என உபேந்திர திவேதி பேசினார். #ArmyChiefWarning #UpendraDwivedi #PakistanErase #OperationSindoor #IndiaPakistan #CrossBorderTerror #IndianArmy #NoRestraint #IndoPakTensions #MilitaryReadiness #JaipurSpeech #BSFHeros #DefendIndia #PakistanTerrorism #GeneralDwivedi
உண்மையிலே கடுமையான எச்சரிக்கைதான்