உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடத்தின் அவல நிலை! UPHC | TN Health Department | Pernambut

ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடத்தின் அவல நிலை! UPHC | TN Health Department | Pernambut

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு எல்.ஆர்.நகரில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. 1 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இன்று ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இனியா என்ற கர்ப்பிணி பரிசோதனைக்கு வந்தார். அவரை செவிலியர் பரிசோதித்த கொண்டிருந்த போது திடீரென கூரை கான்கிரீட் இடிந்து விழுந்தது. கர்ப்பிணியும், செவிலியரும் அலறியடித்து ஓடியபடி தப்பினர். அச்சமடைந்த நோயாளிகள் கட்டடத்தின் உறுதி தன்மை குறித்து சோதனை செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். தரமில்லாமல் பணி செய்த கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டு கொண்டனர்.

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை