சுனிதாவின் தினப்படியை கேட்டு அதிபர் டிரம்ப் ஷாக் ரியாக்ஷன்! | Trump | sunita williams |Butch wilmor
சர்வதேச விண்வெளிக்கு சென்ற நாசா விஞ்ஞானிகள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9 மாதங்களுக்கு பின்பு பூமிக்கு திரும்பி உள்ளனர். கடந்தாண்டு ஜூனில் அவர்கள் சென்ற விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, திட்டமிட்டபடி 8 நாளில் திரும்பி வரமுடியவில்லை. கூடுதலாக 278 நாட்கள் விண்வெளியில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நாசா விஞ்ஞானிகள் கூடுதலாக விண்வெளியில் தங்கியிருந்த நாட்களுக்கு கூடுதலாக ஊதியம் வழங்கப்படுமா? என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டிரம்ப், இது பற்றி யாரும் என்னிடம் இதுவரை சொல்லவில்லை. தேவைப்பட்டால் அந்த கூடுதல் தொகையை நானே எனது பாக்கெட்டில் இருந்து கொடுத்துவிட்டுபோகிறேன் என டிரம்ப் கூறினார்.