உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போர் நிறுத்தத்துக்கு 14 நாடுகள் ஆதரவு தெரிவித்தும் பயனில்லை UNSC| israel gaza war| US vetoes UNSC ce

போர் நிறுத்தத்துக்கு 14 நாடுகள் ஆதரவு தெரிவித்தும் பயனில்லை UNSC| israel gaza war| US vetoes UNSC ce

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்தாண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதைத்தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இதில், 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்ததாக காசா சுகாதார அமைச்சகம் கூறியது. சமீபத்தில் 2 மாதம் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் சம்மதித்தது. ஆனால், இஸ்ரேல் பிணை கைதிகளை ஹாமாஸ் விடுவிக்கவில்லை. இதனால், கோபமடைந்த இஸ்ரேல், மீண்டும் காசா மீது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. சர்வதேச நாடுகள் அனுப்பிய மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்காததால், காசாவில், உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரும் தீர்மானம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்டது. இதில் தடையற்ற மனிதாபிமான உதவி, பிணை கைதிகள் விடுதலை ஆகிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன. இந்த மசோதாவுக்கு மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 14 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால், வீட்டோ எனப்படும் சிறப்பு அதிகாரத்தை அமெரிக்கா பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்தது. இதனால், தீர்மானம் தோல்வி அடைந்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நிரந்தர உறுப்பினர்களுக்கு மட்டும் வீட்டோ சிறப்பு அதிகாரம் உள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அமெரிக்க தூதர் டொரோத்தி ஷியா கூறும்போது, ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் அமெரிக்க உறுதியாக இருக்கிறது. இது தொடர்பாக ஏற்கனவே ஒரு ஒப்பந்ததை முன் வைத்து இருக்கிறோம். ஆனால், தற்போது கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமெரிக்காவின் போர் நிறுத்த முயற்சிகளை குறைத்து மதிப்பிடுவதாக இருக்கிறது எனக்கூறினார். அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ கூறும்போது, காசா தொடர்பான ஐநா தீர்மானம் ஹமாஸ் பயங்கரவாதிகளின் நலன்களை மட்டுமே முன்னிறுத்தி உள்ளது. காசாவை விட்டு ஹமாஸ் வெளியேற வேண்டும் என தீர்மானத்தில் சொல்லப்பட்டு இருக்க வேண்டும் என்றார்.

ஜூன் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை