உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இதுவும் போச்சா? இந்தியா மேல் கை வைத்து முழிக்கும் அமெரிக்கா | American Jewish Committee | Ukraine

இதுவும் போச்சா? இந்தியா மேல் கை வைத்து முழிக்கும் அமெரிக்கா | American Jewish Committee | Ukraine

இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்ந்து இருப்பது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் எதிர்க்கட்சியினரே இந்த அதிக வரி விதிப்பை எதிர்க்கின்றனர். அந்நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் அரசின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். டிரம்பின் இந்த நடவடிக்கை ஒரு வர்த்தக தாக்குதல். சீனாவுக்கு நெருக்கமாக இந்தியாவை கொண்டும் செல்லும் அபாயம் உள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடுகளும் கூட, வரி விதிப்பை ஒரு சீர்குலைவாக பார்க்கின்றன. நாங்கள் நெருக்கமான மற்றும் நிலையான உறவை உருவாக்க இந்தியாவுடன் முயற்சிக்கிறோம். ஆனால் வரி விதிப்பால் இந்தியா, சீனாவுடன் நெருங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என சல்லிவன் தெரிவித்தார். அதே நேரத்தில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், மறுநாளே இந்திய பொருள்களுக்கான வரி 25 சதவிகிதம் குறைக்கப்படும் என்கிறார் வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ. இத்தனை சர்ச்சைகளுக்கும் மத்தியில் 140 கோடிக்கும் அதிகமான மக்களின் எரிசக்தி பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம் என இந்தியா உறுதியாக சொல்லிவிட்டது. கச்சா எண்ணெய் வாங்கும் முடிவுகள் சந்தை நிலவரங்களின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன. சீனாவும், ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய எரிபொருளை தொடர்ந்து வாங்கி வரும் நிலையில், அமெரிக்கா இந்தியாவை மட்டும் குறிவைப்பது நியாயமல்ல என இந்திய வெளியுறவுத்துறை கூறியது. இதற்கு அமெரிக்க யூதர்கள் அமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது. உக்ரைன் மோதலுக்கு இந்தியா பொறுப்பல்ல, அமெரிக்க அதிகாரிகளின் விமர்சனம் தொந்தரவை ஏற்படுத்துகிறது. அமெரிக்க-இந்தியா உறவுகளை மீட்டமைக்க எடுக்க வேண்டும். அமெரிக்க அதிகாரிகளால் இந்தியா மீதான விமர்சனங்கள் கவலை அடைய செய்கிறது. இந்தியா ரஷ்ய எண்ணெயை நம்பியிருப்பதற்கு நாங்கள் வருந்துகிறோம். ஆனால் புடினின் போர் குற்றங்களுக்கு இந்தியா பொறுப்பல்ல என அமெரிக்க யூதர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆக 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ