உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்க அதிபர் தேர்தலில் 1893க்கு பிறகு நடந்த சம்பவம் | Presidents of the US | Donald Trump

அமெரிக்க அதிபர் தேர்தலில் 1893க்கு பிறகு நடந்த சம்பவம் | Presidents of the US | Donald Trump

அமெரிக்க அதிபர் தேர்தலில் பல்வேறு யூகங்களையும், கணிப்புகளையும் பின்னுக்கு தள்ளி டிரம்ப் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே அதிபராக இருந்து, அடுத்த தேர்தலில் தோற்று, மூன்றாம் முறை மீண்டும் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் டிரம்ப் தோற்றபோது அவரது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே பலர் கருதினர். டிரம்ப் ஆதரவாளர்கள் மட்டுமின்றி வணிக நிறுவனங்களும் அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றன. அப்போது கடும் விரக்தியில் இருந்த அவர் பல வாரங்கள் வெளியில் தலை காட்டாமல் இருந்தார். பைடன் பதவியேற்ற நாளில் டிரம்ப் அந்த விழாவில் கலந்து கொள்ள மறுத்து 152 ஆண்டுகால அமெரிக்கப் பாரம்பரியத்தை உடைத்தார். பைடன் பதவியேற்பு நாளன்று டிரம்ப் அவரது குடும்பத்தினர் மற்றும் சில நம்பகமான ஆலோசகர்களுடன் சுற்றுலா சென்றார். 2021 பிப்ரவரி இறுதியில் டிரம்ப் கோபம் குறையத் துவங்கியது. பின்னர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்க ஆரம்பித்தார். 2024 மே மாதம் வரை டிரம்ப் மீண்டும் அதிபராக வருவதற்கு வாய்ப்பே இல்லை என அவரது ஆதரவாளர்களே நினைத்தனர். டிரம்ப் மீது ஆபாச நடிகை தொடர்ந்த வழக்கு உட்பட 34 கிரிமினல் குற்றச்சாட்டுகளில் டிரம்ப்பைக் குற்றவாளி என்று அமெரிக்க கோர்ட் அறிவித்தது.

நவ 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !