உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 180km வேகம்... உலக தரத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் | vande bharat sleeper train trail running v

180km வேகம்... உலக தரத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் | vande bharat sleeper train trail running v

ரயில்வே அமைச்சகம் கொண்டு வந்த புரட்சி திட்டங்களில் முக்கியமானது வந்தே பாரத் ரயில். நாட்டின் முக்கிய நகரங்கள் இடையே சொகுசான மற்றும் துரிதமான பயணத்துக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குறுகிய, நடுத்தரமான தூரத்தை இணைக்கும் நகரங்கள் இடையே ஓடுவதால் வந்தே பார்த ரயில்களில் இதுவரை ஸ்லீப்பர் வசதி இல்லை. முதல் முறையாக நெடுந்தூர பயணத்துக்காக, புது விதமான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை ரயில்வே அமைச்சகம் தயாரித்துள்ளது. விமானத்தில் இருப்பதை போன்று பல சொகுசு வசதிகளுடன் இந்த ரயில் முழு அளவில் தயாராகி விட்டது. இந்த ரயில் ஏற்கனவே ஓடும் வந்தே பாரத் ரயில்களை விட கூடுதல் வேகத்தில் இயக்கப்பட உள்ளது. மூன்று நாட்களாக சோதனை ஓட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சோதனை ஓட்டத்தின் போது, மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பறக்கும் வீடியோவை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். ரயில் பயண பிரியர்களை அந்த வீடியோ வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஜன 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி