அடைக்கலம் கொடுத்த கவுன்சிலரின் கணவரும் கைது | VCK | VCK Councilor | Kumbakonam
விசிக கவுன்சிலர் வீட்டு கட்டிலுக்கு அடியில் பதுங்கிய 4 ரவுடிகள்! கும்பகோணம் பாத்திமாபுரத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் வயது 41, விசிகவின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர். இவரது மனைவி ரூபின்ஷா, கும்பகோணம் மாநகராட்சி 24வது வார்டு கவுன்சிலர். பதிவேடு குற்றவாளியான அலெக்ஸ் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சோதனையின் போது கட்டிலில் கையில் கட்டுடன் அவரது மகன் படுத்திருந்தார். கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த கெயில் ஆண்டனி, அர்னால்டு ஆண்டனி, அருண்குமார், பால்சாமி ஆகிய 4 பேர் சிக்கினர். இந்த 4 பேரும் பாத்திமாபுரத்தில் கடந்த 5ம் தேதி நள்ளிரவில் பைக்கில் சென்ற விஸ்வா என்பவரை தாக்கி விட்டு தப்பி சென்றதாக வழிப்பறி, கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள். 10க்கும் மேற்பட்ட கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் அலெக்ஸ் வீட்டில் போலீசார் பறிமுதல் செய்தனர்.