/ தினமலர் டிவி
/ பொது
/ தியேட்டர் முன் விக்ரம் ரசிகர்கள் பயங்கர மோதல்-பதற்றம் | Veera dheera shooran | Vikram | vikram fans
தியேட்டர் முன் விக்ரம் ரசிகர்கள் பயங்கர மோதல்-பதற்றம் | Veera dheera shooran | Vikram | vikram fans
விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் படம் இன்று காலை 9 மணிக்கு ரிலீஸ் ஆக இருந்தது. முதல் ஷோவுக்கான டிக்கெட் எடுத்த ரசிகர்கள் காலை 7 மணி முதல் தியேட்டர்களில் குவிந்தனர். ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தியேட்டரிலும் முதல் ஷோவுக்கு வந்த ரசிகர்கள் ஆட்டம்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோர்ட் உத்தரவு காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் இடையே திடீரென மோதல் வெடித்தது. இரு குழுவாக விக்ரம் ரசிகர்கள் சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓடி, ஓடி ஒருவரையொருவர் தாக்கினர். கல்லால் அடித்ததில் ரசிகர் ஒருவரின் மண்டை உடைந்த ரத்தம் கொட்டியது. அந்த இடமே கலவர பூமியாக மாறியது.
மார் 27, 2025