உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புனித ஆரோக்கிய மாதா தேரை காண திரண்ட மக்கள் கூட்டம்! Velankanni | Church Festival | Our Lady of Good

புனித ஆரோக்கிய மாதா தேரை காண திரண்ட மக்கள் கூட்டம்! Velankanni | Church Festival | Our Lady of Good

வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டு திருவிழா நடந்து வருகிறது. 10 நாட்கள் நடந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதா பெரிய தேர் பவனி சிறப்பாக நடந்தது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் பேராலயத்தில் சிறப்பு கூட்டுபாடல் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் தேர் பவனியில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்து கோயில் அர்ச்சகர், முஸ்லிம் தர்கா ஆதினம், கிறிஸ்தவ பாதிரியார்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்தனர். அதனை தொடர்ந்து பேராலய முகப்பில் இருந்து உத்திரியமாதா, அந்தோணியார் உட்பட சிறிய தேர்கள் முன்னே வர அதற்கு பின்னால் பெரிய சப்பரத்தில் புனித ஆரோக்கிய மாதாவின் தேரினை பக்தர்கள் சுமந்து வந்தனர். பெரிய தேரானது வேளாங்கண்ணியின் முக்கிய வீதிகள் வழியாக சென்றபொழுது, இருபுறமும் நின்றிருந்த லட்சக்கணக்கான மக்கள் தேர் மீது மலர்களை தூவி வேண்டுதல்களை நிறைவேற்றினர். வேளாங்கண்ணி மாதா பிறந்த நாளை முன்னிட்டு காலை பேராலயத்தில் ஆயர் சகாயராஜ் தலைமையில் கூட்டு பாடல், மற்றும் திருப்பலிகள் நடக்க உள்ளன. அதனை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு கொடி இறக்கப்பட்டு வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா நிறைவு பெற உள்ளது.

செப் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை