/ தினமலர் டிவி
/ பொது
/ மாநாட்டுக்கு இடம் கொடுக்க மறுப்பு! பின்னணியில் யார்? | Vijai | Actor Vijai | Vijai's Political Entr
மாநாட்டுக்கு இடம் கொடுக்க மறுப்பு! பின்னணியில் யார்? | Vijai | Actor Vijai | Vijai's Political Entr
நடிப்புக்கு விடை கொடுத்து அரசியல் தலைவராக திட்டமிட்ட விஜய் தவெக கட்சியை அறிவித்தார். மாணவர்களுக்கு பாராட்டு விழா, நலத்திட்ட உதவிகள் என அரசியலுக்கு அச்சாரம் போட துவங்கினார். லோக்சபா, இடைத்தேர்தல் என எதுக்கும் செவி கொடுக்காமல் குறிக்கோள் 2026 சட்டசபை தேர்தல் தான் என செயல்பட துவங்கினார். தி கோட் படத்திற்கு பிறகு முழு அரசியலில் ஈடுபடுவார் என கூறப்பட்டு உள்ளது. மாணவர்கள் சந்திப்பு, ட்விட்டர் அரசியல் என பிசியாக இருந்த விஜய் இப்போது நேரடி அரசியலில் ஈடுபட முடிவெடுத்திருக்கிறார். செப்டம்பரில் அவரது கட்சியின் முதல் மாநில மாநாடு நடக்கும் என கூறப்படுகிறது.
ஆக 04, 2024