/ தினமலர் டிவி
/ பொது
/ தவெக மாநாட்டுக்கு 200 கி.மீ. சைக்கிள் பயணம் Vijai | TVK Conference | Vikkiravandi | Raja | Handicapp
தவெக மாநாட்டுக்கு 200 கி.மீ. சைக்கிள் பயணம் Vijai | TVK Conference | Vikkiravandi | Raja | Handicapp
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு நாளை நடக்கிறது. தமிழகம், புதுச்சேரி மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் விக்கிரவாண்டியை நோக்கி வரத் தொடங்கி உள்ளனர். தஞ்சாவூரைச் சேர்ந்த 45 வயது மாற்றுத் திறனாளி ராஜா 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு சைக்கிளில் பயணம் செய்து விக்கிரவாண்டிக்கு வந்துகொண்டிருக்கிறார். விஜய் ரசிகரான ராஜா 13 வயதில் சாலை விபத்தில் ஒரு காலை இழந்தார். ஒற்றைக் காலுடன் கடையில் வேலை செய்து வரும் ராஜா, ஒரு காலிலேயே சைக்கிளும் ஓட்டுகிறார். விக்கிரவாண்டி மாநாட்டுக்கு தஞ்சாவூரில் இருந்து புறப்பட்ட ராஜா பாபநாசம் வந்தார்.
அக் 26, 2024