உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டூட்டி நேரத்தில் பெர்மிஷன் கேட்டு விஜய்க்கு வெல்கம் | Vijay | TVK | Madurai Police

டூட்டி நேரத்தில் பெர்மிஷன் கேட்டு விஜய்க்கு வெல்கம் | Vijay | TVK | Madurai Police

மதுரை தெப்பக்குளம் குற்றப்பிரிவு ஏட்டு கதிரவன் மார்க்ஸ். தீவிர விஜய் ரசிகர். விளக்குத்தூண் ஸ்டேஷனில் மாற்று பணியில் இருந்த இவருக்கு வியாழனன் மதியம் சித்திரைத்திருவிழா பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது கொடைக்கானல் சினிமா படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து மதுரை ஏர்போர்ட்டுக்கு தவெக தலைவர் விஜய் வந்தார். அவரை பார்க்க பணி நேரத்தில் பெர்மிஷன் கேட்டு சென்ற மார்க்ஸ் மப்டியில் கட்சிக்கொடி அணிந்து கொண்டு விஜய்க்கு மாலை அணிவித்து வழியனுப்பி வைத்தார். இந்த போட்டோ மற்றும் வீடியோ காட்சிகள் கமிஷனர் லோகநாதனின் பார்வைக்கு சென்றது. டூட்டி நேரத்தில் விஜயை பார்க்க சென்ற மார்க்ஸை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

மே 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை