உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னையில் இறங்கிய வெளிமாநில கும்பல்-ஷாக் வீடியோ | cell phone theft | chennai crime | viral video

சென்னையில் இறங்கிய வெளிமாநில கும்பல்-ஷாக் வீடியோ | cell phone theft | chennai crime | viral video

திருட்டில் பல ரகம்... இவங்க வேற ரகம் புது டெக்னிக்குடன் இறங்கிய கும்பல்! எப்படி திருடுறாங்கணு இந்த வீடியோ பாருங்க! பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் காத்திருக்கும் போதும், பஸ், ரயிலில் பயணம் செய்யும் போதும் பிக்பாக்கெட் அடிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. முன்பெல்லாம் பாக்கெட்டில் பிளேடு போட்டு பர்சை அடிப்பது தான் திருடர்களின் டெக்னிக். கால மாற்றத்துக்கு ஏற்ப திருடர்களின் டெக்னிக்கும் மாறிவிட்டது. அந்த வகையில் சென்னை, தாம்பரம் பகுதிகளில் வித்தியாசமான டெக்னிக்குடன் வெளிமாநில கும்பல் பல களம் இறங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவசர அவசரமாக பஸ்சில் ஏறும் பயணிகளுடன் திருடர்களும் சேர்ந்து ஏறுகின்றனர். கையில் குட்டி பேக் வைத்திருக்கின்றனர். படிக்கட்டில் ஏறும் பயணிகளின் முன்பக்கத்தில் போடுகின்றனர். நைசாக கையை பாக்கெட்டில் விட்டு செல்போன் அல்லது கிடைக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடுகின்றனர். தாம்பரத்தில் இந்த டெக்னிக்கை பயன்படுத்தி 4 திருடர்கள் பயணிகளிடம் செல்போன் பறிக்க முயற்சிப்பதை மஃப்டியில் இருந்த போலீஸ்காரர் மோப்பம் பிடித்தார். விரட்டி சென்று கும்பலில் ஒருவனை பிடித்தார். போலீசுக்கு உதவிய ஆட்டோக்காரர் ஒருவர் இன்னொருத்தனை பிடித்தார். மற்ற 2 பேர் தப்பிவிட்டனர். சிக்கியவர்களில் ஒருத்தன் அகாஷ்ப் பதான் வயது 21. ஒடிசாவை சேர்ந்தவன். இன்னொருத்தன் மகேந்திரா வயது 18. ஆந்திராவை சேர்ந்தவன். தப்பி ஓடிய மற்றவர்களும் ஆந்திரா, ஒடிசாவை சேர்ந்தவர்கள் தான். வெளிமாநில கும்பல் நைசாக திருட முயற்சி செய்யும் காட்சியும், அவர்களை போலீஸ்காரர் விரட்டி பிடிக்கும் காட்சியும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது. இப்போது அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, தாம்பரம் பகுதிகளில் பேக்குக்கு பதில் கைக்குட்டையை போட்டு செல்போன் பறிக்கும் கும்பல் சமீபத்தில் சிக்கியது. அவர்களும் ஆந்திரா மற்றும் ஒடிசாவை சேர்ந்தவர்கள் தான். இதே போல் இன்னும் நிறைய பேர் சுற்றி வருகின்றனர். அவர்களிடம் பயணிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கின்றனர்.

ஆக 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி