உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பரபரப்பான சூழலில் இந்தியா வரும் ரஷ்ய அதிபர் | Vladimir Putin | Russia President | India Visit | FM S

பரபரப்பான சூழலில் இந்தியா வரும் ரஷ்ய அதிபர் | Vladimir Putin | Russia President | India Visit | FM S

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளை கடந்து நீடிக்கிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. கடந்த ஆண்டு ஜூலையில் ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு பயணம் செய்த நமது பிரதமர் மோடி, இரு நாட்டு அதிபர்களிடமும் போரை நிறுத்துவது தொடர்பாக பேசி இருந்தார். அதே சமயம் ரஷ்ய அதிபர் புடினை இந்தியா வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று இப்போது புடின் இந்தியா வர இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கான இந்திய தூதரகமும், ரஷ்ய சர்வதேச விவகார கவுன்சிலும் இணைந்து மாஸ்கோவில் நடத்திய மாநாட்டில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசிய அவர், புடின் இந்திய வருகையை உறுதி செய்தார். இந்திய பயணத்துக்கான தேதியை புடின் இன்னும் உறுதி செய்யவில்லை என்றாலும், இரு தரப்பிலும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கி விட்டன. 3வது முறையாக மீண்டும் தேர்வான பிறகு, பிரதமர் மோடி தனது முதல் வெளிநாடு பயணத்திற்கு ரஷ்யாவை தேர்வு செய்ததை குறிப்பிட்ட லாவ்ரோவ், இப்போது எங்கள் முறை என்றார்.

மார் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை