உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கதேச ராணுவ தளபதி வெளிப்படை கருத்து

வங்கதேச ராணுவ தளபதி வெளிப்படை கருத்து

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு உள்நாட்டு கலவரம் வெடித்தது. இதையடுத்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினா். தொடர்ந்து முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு வங்கதேசத்தில் ஆட்சி அமைத்தது. வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள் மீது தாக்குதல் அதிகரித்தது. அவர்களின் வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன. இந்து சன்னியாசிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், நம் நாட்டில் சட்ட விரோதமாக குடியேறிய வங்க தேசத்தினரை நாடு கடத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வகிறது. டில்லியில் போலீஸ், அதிகாரிகள் வீடு வீடாக சாேதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், இந்தியா - வங்கதேச உறவு குறித்து வங்கதேச ராணுவ தளபதி ஜெனரல் வாக்கர் - உஸ் - ஜமான் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா மிக முக்கியமான அண்டை நாடு. நாங்கள் பல விஷயங்களில் இந்தியாவை சார்ந்திருக்கிறோம். எங்களுக்கு தேவையான பல பொருட்களை அங்கிருந்து தான் இறக்குமதி செய்கிறோம். எங்கள் நாட்டை சேர்ந்த பலர் மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்தியாவை சார்ந்துள்ளனர்.

ஜன 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை