கிரிக்கெட்டில் சாதித்த இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து
20வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடைபெறுகிறது. கிரிக்கெட் இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்தியாவின் அபார பந்துவீச்சால் ரன் எடுக்க திணறியது. 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்தது. இந்திய அணி 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. இந்திய அணிக்கு வாழ்த்து கூறியுள்ள முதல்வர் விஜய், அந்த அணியில் இடம் பிடித்துள்ள தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு, தமிழக அரசு சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 75 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த வெற்றி இளைய தலைமுறையினருக்கு புதிய உத்வேகம், நம்பிக்கை அளிக்கும். வாஷிங்டன் சுந்தர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன் என முதல்வர் விஜய் கூறியுள்ளார்.