வயநாடு நிலச்சரிவால் நெஞ்சை உலுக்கும் சோகம் | Wayanad landslides | mundakkai | chooralmala
மகளுக்கு இறுதிச்சடங்கு செய்ய ஒரு கை மட்டுமே கிடைத்தது! அடையாளம் காட்டிய மோதிரம் கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் மண்ணில் புதைந்து இறந்தவர்கள் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்து விட்டது. இன்னமும் 200க்கு மேற்பட்டோரை காணவில்லை. இறந்தவர்கள் பலரின் கை, கால்கள் தனித்தனியாக கிடைத்துள்ளன. அவை யார் யாருடைது என்று அடையாளம் காண முடியாத நிலை உள்ளது. மரபணு சோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடக்கிறது. அப்படி, சேறு கதிகளுக்கு இடையே கிடைத்த கைகளில் ஒன்று ராமசாமியின் மகள் ஜிஷாவினுடையது. அந்த கையை பிடித்துதான் ஜிஷாவுக்கு நடக்க பழகி கொடுத்தார். அடையாளம் கண்டு கொண்ட ராமசாமி, மகளே... என அந்த கையை கட்டியணைத்து வெடித்து அழுதது அந்த இடத்தை மேலும் சோகமாக்கியது. நிலச்சரிவில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த ராமசாமிக்கு, மகளுக்கு இறுதிச்சடங்கு செய்ய முழு உடல்கூட கிடைக்கவில்லை. இடது கை மட்டும் தான் எஞ்சியது. அந்த கை விரலில் இருந்த மோதிரம் தான், ஜிஷாவின் கை என்பதை அடையாளம் காட்டியது. அது, ஜிஷாவின் கணவர் முருகனின் பெயர் பொறிக்கப்பட்ட திருமண மோதிரம்.