பெண்ணை காப்பாற்றி மருத்துவ செலவை ஏற்ற மத்திய அமைச்சர் Woman Trapped Under Lorry | Union Minister Ba
தெலங்கானா மாநிலம் ஹுஜூராபாத் மண்டலம் சிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திவ்யஸ்ரீ. மணகொண்டூர் நெடுஞ்சாலையை கடக்கும் போது லாரி ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. லாரிக்கு நடுவில் படுத்துக்கொண்டால் லாரி மோதாமல் தப்பிக்கலாம் என நினைத்த திவ்யஸ்ரீ சாலையில் படுத்துள்ளார். டிரைவர் லாரியை நிறுத்த முயன்றார். லாரி திவ்யஸ்ரீயை கடந்து சிறிது தூரம் சென்று நின்றது. லாரியின் பின்பக்க டயரின் திவ்யஸ்ரீயின் தலைமுடி சிக்கியதால் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். தலைமுடி டயரில் சிக்கி இருந்ததால் அவரால் வெளிவர முடியவில்லை. அந்த வழியாக வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் , கூட்டத்தை பார்த்து காரில் இருந்து இறங்கி வந்து உதவினார். ஜாக்கி மூலம் லாரி டயரை உயர்த்தி, அதில் சிக்கியிருந்த திவ்யஸ்ரீயின் முடியை கத்திரி மூலம் வெட்டி அப்பெண் மீட்கப்பட்டார்.