சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: இந்தியாவுக்கே சாதகம் | Word Bank | Indus Water Treaty
காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. பஹல்காம் தாக்குதல் நடந்த உடனேயே இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என மத்திய அரசு அறிவித்தது. இந்த ஒப்பந்தம் 1960ம் ஆண்டு உலக வங்க முன்னிலையில் இந்தியாவுக்கும்,பாகிஸ்தானுக்கும் இடையே கையெழுத்தானது. அதன்படி சிந்து ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரை இருநாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு கிழக்கு பகுதி ஆறுகளான ரவி, பியாஸ், சட்லெஜ், பாகிஸ்தானுக்கு மேற்கு பகுதி ஆறுகளான சிந்து, ஜீலம், செனாப் ஒதுக்கப்பட்டன. இப்போது சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.