உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / என் மகன் எதிர்பார்க்கறது வேற; மருமகளுக்கு மாமனார் செக்ஸ் பாடம் Young woman dies |Tirupur

என் மகன் எதிர்பார்க்கறது வேற; மருமகளுக்கு மாமனார் செக்ஸ் பாடம் Young woman dies |Tirupur

திருப்பூர் மாவட்டம், அவிநாசி, கைகாட்டிப்புதுாரை சேர்ந்தவர் அண்ணாதுரை 53. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மனைவி ஜெயசுதா 42. இவர்களது மகள் ரிதன்யாவுக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணனின் பேரன் கவின் குமாருக்கும் கடந்த ஏப்ரல் 11ம்தேதி திருமணம் தடபுடலாக நடந்தது. அவிநாசியிலுள்ள பழங்கரை பகுதியில் புதுமணத் தம்பதியர் வசித்தனர். திருமணமான நாள் முதல் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் ரிதன்யாவை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் செட்டிபுதுாரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் ரிதன்யா விஷம் குடித்து தற்கொலை செய்தார். சேவூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தற்கொலை செய்வதற்கு முன் அப்பாவுக்கு ஆடியோ மெசேஜை ரிதன்யா அனுப்பியுள்ளார்.

ஜூலை 01, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kalyanaraman
ஜூலை 01, 2025 09:43

நடந்து கொண்டிருப்பது திமுக ஆட்சி, குற்றவாளி காங்கிரஸ்காரனாக இருப்பதால் இந்த கேஸை அப்படியே அமுக்கி விடுவார்கள்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !