பிடிக்க வந்த போலீசாரை தாக்கிய வாலிபர்: நடந்தது என்ன? youth attacks police sub inspector attacked Ba
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வல்லரசு (24). கட்டுமான தொழிலாளி. மகளிர் தினத்தன்று இவர், பர்கூர் பஸ் நிலையத்துக்கு பைக்கில் சென்றார். போதையில் இருந்த அவர் பஸ் நிலையத்தில் பெண்கள் நின்ற பகுதியில் வண்டியை நிறுத்தி, ஆக்சிலேட்டரை முறுக்கி முறுக்கி பந்தா விட்டதாக கூறப்படுகிறது பஸ் நிலையத்தில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் திருவேல்முருகன் இதை பார்த்தார். வல்லரசை மடக்கிப் பிடித்து வண்டியில் ஏற்றினார். ஏட்டு வண்டியை ஓட்ட எஸ்ஐ திருவேல்முருகன் பின்னால் உட்கார்ந்து கொண்டு, வல்லரசை பிடித்துக் கொண்டார். கொஞ்ச தூரத்திலேயே வல்லரசு திடீரென திமிறினார். வண்டியை விட்டு கீழே குதித்து ஓட பார்த்தார். ஆனால், எஸ்ஐ திருவேல்முருகன் உடும்புப்பிடியாக பிடித்துக் கொண்டார்.