சென்னை நுங்கம்பாக்கம் போலீசில் பரபரப்பு புகார்! | Yuvan Shankar Raja | Yuvan Police Complaint | Nung
இளையராஜாவின் மகனும், முன்னணி இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. யுவன் தங்கி இருந்த வீட்டின் ஓனர் அஜ்மத் பேகம் சார்பில் அவரது சகோதரர் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை லேக் ஏரியா பகுதியில் தமக்கு சொந்தமான வீட்டில் யுவன் குடியிருந்தார். அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து ஸ்டூடியோ அமைத்து இருந்தார். சில வருடங்களாக அவர் வாடகை பணம் தரவில்லை. பல முறை நினைவூட்டியும் அவர் பணம் தராமல் இருந்தார். வாடகை பாக்கி 20 லட்சம் நிலுவையில் உள்ளது. போனில் தொடர்பு கொண்டாலும் அவர் எடுப்பதில்லை. இந்த சூழலில் இரவோடு இரவாக அவசரமாக அவர் வீட்டை காலி செய்து வருகிறார். விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வாடகை பணத்தை பெற்று தர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.