மசூதியில் சம்பவம்: இந்தியாவில் அதிர்ச்சி Zakir Naik meets Lashkar terrorists Lahore mosque Pakistan
மும்பையைச் சேர்ந்தவர் ஜாகிர் நாயக். இஸ்லாமிய மத போதகர். 2016ல் டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலின்போது பிடிபட்ட ஒரு பயங்கரவாதி, ஜாகிர் நாயக்கின் பேச்சை யூ டியூப்பில் பார்த்து பயங்கரவாத தாக்குதலை நடத்தியதாக வாக்குமூலம் அளித்தான். அதன் பிறகு, இந்தியாவில் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசியது, பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது, நிதி திரட்டியது போன்ற செயல்களுக்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் என்.ஐ.ஏ. வழக்கு பதிவு செய்து விசாரிக்க துவங்கியது. 2016ல் மலேசியாவுக்கு சென்ற ஜாகிர் நாயக், இந்தியா திரும்பினால் தான் கைது செய்யப்படலாம் என நினைத்து, அங்கேயே தங்கி விட்டார். நாட்டை விட்டு தப்பியோடிய தப்பியோடிய நபராக ஜாகிர் நாயக்கை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி பாகிஸ்தானுக்கு ஜாகிர் நாயக் சென்றார். அரசு விருந்தினர் என்ற முறையில் அவர் பாகிஸ்தானில் ஒரு மாத சுற்றுப்பயணத்தில் உள்ளார். வழக்கமாக, ஒரு நாட்டின் தலைவர், உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் பாகிஸ்தானில் அரசு விருந்தினர் என்ற கவுரவம் வழங்கப்படும். அந்த பெருமையை ஜாகிர் நாயக்குக்கு பாகிஸ்தான் அரசு வழங்கியிருப்பதற்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்தது.